Share on Social Media

கத்திரிக்காய் வியாபாரமோ, கப்பல் கம்பெனியோ… எதுவாகவும் இருக்கட்டும், ஒரு பிசினஸில் நாம் விற்பனை செய்யும் பொருள் நான்கு பேருக்குத் தெரியவேண்டும். அப்போதுதான் வெற்றி, சாத்தியம். இந்த அடிப்படையைத்தான் `Branding’ என்று பிசினஸில் குறிப்பிடுகிறார்கள்.

தைவானைச் சேர்ந்த பிரபல பெண் தொழிலதிபர் ஈவா சென் (Eva Chen), `உங்கள் பிராண்டை ஒரு லைஃப்ஸ்டைலைப் போல உருவாக்குங்கள்; வாடிக்கையாளர்கள் தாங்களாகவே உங்களைத் தேடிவருவார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

அப்படித்தான், டாம் மோனாகன் வெகு தெளிவாக பிராண்டிங்கில் கவனம் செலுத்தினார். இன்றைக்கு அவர் உருவாக்கிய டோமினோ’ஸ் பீட்ஸா உலகின் மூலைமுடுக்குகளிலெல்லாம் உட்கார்ந்துகொண்டு தன் தர்பாரை நடத்திக்கொண்டிருக்கிறது.

Domino's Pizza Delivery

Domino’s Pizza Delivery
Photo by Rauf Allahverdiyev from Pexels

அவரின் முழுப்பெயர் தாமஸ் ஸ்டீபன் மோனோகன் (Thomas Stephen Monaghan). 1937-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனுக்கு அருகிலுள்ள ஆன் ஆர்பர் என்ற இடத்தில் பிறந்தார். குடும்பத்துடன் குதூகலமாக வாழும் வாழ்க்கை டாம் மோனோகனுக்கு வாய்க்கவில்லை. தந்தை இறந்தபோது டாமுக்கு நான்கு வயது. அவருடைய அம்மா குழந்தைகளைத் தனியாளாக வளர்க்க முடியாமல், டாமையும் அவர் தம்பி ஜேம்ஸையும் ஓர் ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்தார். `ஃபெலிசியன் சிஸ்டர்ஸ்’ அந்த இல்லத்தை கன்னியாஸ்த்ரீகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது டாமுக்கு வெறும் ஆறு வயது. பின்னாளில் அவர் அம்மாவே குழந்தைகளைத் தன்னோடு அழைத்துப் போய் வளர்த்தார். என்றாலும், அந்த ஆதரவற்றோர் விடுதி டாமுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியது; புதுப்புது விஷயங்களைக் கற்றுத் தந்தது; பலவிதமான மனிதர்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது; எதிர்காலம் குறித்துக் கனவு காண அவருக்கு விதை போட்டது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *