Share on Social Media

​கர்ப்பத்தின் 19 வாரங்களில் குழந்தையின் வளர்ச்சி

கர்ப்பகாலத்தில் 19 வது வார தொடக்கத்தின் முடிவில் குழந்தை பெரிய வாழைப்பழம் அல்லது மாம்பழத்தின் அளவாக இருக்கலாம். இந்த வாரத்தில் குழந்தையின் தோல் உங்கள் வயிற்றில் வெர்னிக்ஸ் கோசோசா வடிவத்தில் பாதுகாப்பாக இருக்கும்.

கருவுற்ற அறிகுறிகள் : இந்த அசாதாரண அறிகுறிகளும் நீங்கள் கர்ப்பமா இருப்பதை காட்டுமாம்!

குழந்தையின் உடல் பாதுகாப்பாக இருக்கும். பிறக்கும் போது குழந்தையின் தோல் சுருக்கமாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் உணர்திறன் அம்னோடிக் திரவத்திலிருந்து பாதுகாக்கப்படும். இந்த வாரத்தில் குழந்தை தொடர்ந்து வளர்வார்கள்.

​19 வார கர்ப்பத்தில் வயிற்றில் குழந்தை அளவு

19-

உங்கள் குழந்தை இந்த 19 வாரத்தில் மாம்பழம் அல்லது வாழைப்பழம் அளவு இருப்பார்கள். குழந்தை முதிர்ச்சியடைந்த உறுப்புகள் மேலும் வளர்ந்திருக்கும்.

குழந்தையின் எடை 240 முதல் 250 கிராம் வரை இருப்பார்கள். குழந்தையின் உயரம் 6- 6.5 அங்குலங்கள் வரை இருக்கலாம். நீங்கள் உங்கள் கர்ப்பகாலத்தை ஆரோக்கியமாக கடந்திருந்தால் இந்த வாரத்தில் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.

குழந்தையின் மூளை உணர்ச்சி பகுதிகளின் வளர்ச்சி குழந்தையின் தலையில் தனித்துவமான கூந்தலின் வளர்ச்சி இறுதியாக குழந்தையின் சிறுநீரகங்கள் முழுமையான செயல்பாடுகள் போன்றவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

​9 வார கர்ப்பத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்கள்

9-

குழந்தையின் உடல் மாற்றங்கள் வளர்ச்சி வயிற்றுக்குள் வேகமாக வளரலாம். கர்ப்பத்தின் 19 வது வாரத்தில் குழந்தையின் வளர்ச்சியிலும் மாற்றங்களை காணலாம். குழந்தை அதிக சுறுசுறுப்புடன் இருக்கலாம். நீங்கள் இன்னும் காலை நோய் அல்லது குமட்டலை எதிர்கொண்டிருந்தால் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு இடமளிக்க இரு மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் வழக்கத்தை காட்டிலும் சற்று சோர்வாக இருப்பீர்கள்.

மார்பகங்கள் அளவு அதிகரிக்கும். எடை அதிகரித்திருப்பீர்கள். இந்த காலத்தில் சரியான எடையை கொண்டிருக்க வேண்டும். எடை அதிகமாக இருந்தாலும் எடை குறைவாக இருந்தாலும் அது ஆபத்தை உண்டாக்க செய்யும்.

​19 வது வாரத்தில் கர்ப்பிணிக்கு உண்டாகும் அறிகுறிகள்

19-

19 வது வாரத்தில் அறிகுறிகள் என்ன மாதிரி இருக்கும் என்று தெரிந்துகொள்வோம். ஏற்கனவே கர்ப்பகால அறிகுறிகளுக்கு பழகி விட்டிருப்பீர்கள்.

இந்த வாரத்தில் சூடான ஃப்ளாஷ்கள் உண்டாகும். இரண்டாவது ட்ரைமெஸ்டரின் மூன்றாவது மாதத்தில் நுழையும் போது சூடன ஃப்ளாஷ் அனுபவிக்கலாம்.உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வியர்வை வெப்பம் அதிகமாக உணரலாம்.

எல்லா இடங்களிலும் வலிகளை உணரலாம். உடல் எடை அதிகமாக கொண்டிருப்பதால் சில இடங்களில் வலி உண்டாக கூடும். இடுப்பில் தசைநார்கள் தளர்த்தப்படுவதால் இதை எதிர்பார்க்கலாம்.

எடை அதிகரிப்பு காரணமாகவும் ஹார்மோன் மற்றும் சோர்வு காரணமாகவும் கால் பிடிப்புகள் இருக்கலாம். நீங்கள் இலேசான தலைவலி மற்றும் தலைச்சுற்றலை எதிர்பார்க்கலாம். கருப்பை வளர்ந்து விரிவடைவதால் வயிற்றில் வலி உண்டாகலாம்.

​19 வாரத்தில் வயிறு, அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் என்ன பார்க்கலாம்

19-

கர்ப்பத்தின் 19 வது வாரம் வயிறு நன்றாக தெரியகூடும். எல்லா பெண்களுக்கும் வயிறு நன்றாக தெரியும். கர்ப்பத்தின் 19 வாரங்களில் குழந்தை வேகமாக உதைக்க செய்வார்கள். இது வயிற்றில் சிறுவலி இருக்க கூடும்.

19 வது வாரங்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யலாம். குழந்தை ஏற்கனவே ஒளி, வாசனை, சுவை, செவிப்புலன் போன்றவற்றை நன்றாகவே உணர செய்வார்கள். நரம்பு செல்கள் நன்றாக வேலை செய்ய கூடும். குழந்தைக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

இது அம்னோடிக் திரவத்திலிருந்து குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க செய்யும். இந்த அம்னோடிக் திரவம் சூழ்ந்ததால் குழந்தையின் சருமம் வெள்ளையாக இருப்பதை பிறந்தவுடன் பார்க்கலாம்.

குழந்தை அசைவு குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கலாம். ஸ்கேனில் இதயம், மூளை மற்றும் முதுகெலும்பை பார்க்கலாம்.

​19 வாரத்தில் கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்

19-

கர்ப்பகாலத்தில் உணவு என்பது தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பிரசவம் வரை மற்றும் தொடர்ந்து நீங்கள் உணவை ஆரோக்கியமானதாக கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தையின் வளர்ச்சிக்கு சேர்க்க வேண்டிய உணவுகள் மனதில் கொள்ளுங்கள்.

குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு வைட்டமின் பி நிறைந்த உணவுகள் எடுத்துகொள்ளுங்கள். உங்கள் தட்டில் பால் இறைச்சி சீஸ் மற்றும் சோயா சேர்க்கவும்.

பெண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் புரோஜெஸ்ட்ரான், இயற்கையாக அதிகரிப்பது எப்படி?

நல்ல கொழுப்புகள் குழந்தை வளர்ச்சிக்கு உதவக்கூடும். கொட்டைகள் மற்றும் விதைகள் சிற்றுண்டியாக எடுக்கலாம். குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். உணவில் பால் சேர்ப்பதை கட்டாயமாக்குங்கள். இலை, பச்சை காய்கறிகள் மற்றும் புதிய பழங்கள் எடுத்துகொள்வதன் மூலம் இரத்த சோகை அபாயத்தை குறைக்கலாம்.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களுடன் கொட்டைகள் மற்றும் விதைகள் சாப்பிடுங்கள். சோயா பீன்ஸ், புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வழங்குகிறது.

மெலிந்த இறைச்சி சிவப்பு இறைச்சிகள் புரதச்சத்து நிறைந்தவை. அசைவ உண்பவர்களுக்கு இது நல்ல வழியும் கூட

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *