Share on Social Media


2015-ம் ஆண்டுக்குப் பிறகு பெய்த கனமழையால், சென்னையிலுள்ள சாலைகள் எல்லாம் மழைநீரில் மூழ்கின. கொளத்தூர், கொரட்டூர், பெரம்பூர், தாம்பரம், ஆழ்வார்பேட்டை என நகரெங்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே மூன்று நாள்களுக்கும் மேலாகத் தண்ணீர் தேங்கியதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேபோல, கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை பாதித்த இடங்களைப் பார்வையிட்டு வரும் முதல்வர் ஸ்டாலின், வரும் நவம்பர் 19-ம் தேதி அவசர அமைச்சரவைக் கூட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறார்.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருக்கிறார். வடகிழக்கு பருவமழையால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை நிவாரணத் தொகையை அரசு அறிவிக்காதது அரசியல்ரீதியாக முதல்வருக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. அதனால், நவம்பர் 19-ம் தேதி நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், நிவாரணத் தொகை வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவிருக்கிறார் முதல்வர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *