Share on Social Media


இதுபோன்ற பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன, பிரச்னை எப்போது சரியாகும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபுவிடம் கேட்டோம்:

“CoWIN, Aarogya Setu இரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அப்ளிகேஷன்கள். அவற்றின் பயன்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தும் மத்திய அரசின் கண்காணிப்பில்தான் உள்ளன. நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. இந்த அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

இதன் காரணமாக நேற்று நாடு முழுவதுமுள்ள பல கோடி பேர் இதில் முன்பதிவு செய்வதற்காக முயன்றிருப்பார்கள். அதனால் இதுபோன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் படிப்படியாக சீராகிவிடும். மே 1-ம் தேதிக்கு இன்னும் இரண்டு நாள்கள் உள்ளதால், தொழில்நுட்பக் கோளாறுகள் சரியாகிவிடும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *