Share on Social Media


புதுடில்லி :கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் 18 மற்றும் 20ம் தேதிகளில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

வைரஸ் பாதிப்பு குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்நிலையில் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.வரும் 18ல் ஒன்பது மாநிலங்களை சேர்ந்த, 46 மாவட்ட கலெக்டர்களுடனும், 20ம் தேதி, 10 மாநிலங்களை சேர்ந்த, 54 மாவட்ட கலெக்டர்களுடனும் பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”முதல்வர்களை அலட்சியப்படுத்தி, கலெக்டர்களுடன் நேரடியாக பேசுவதன் வாயிலாக கூட்டாட்சி முறையை சிதைக்க, பிரதமர் முயற்சிக்கிறார்,” எனக் கூறியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *