Share on Social Media

`பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது’ என்ற தடைகள் உடைக்கப்பட்டும், மீறப்பட்டும் வருகின்றன. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இந்த நூற்றாண்டிலும் தன் பெற்றோரிலிருந்து நெருக்கமான உறவுகள் வரை மரணம் என்ற பிரிவால் பிரிகையில், வீட்டு வாசலில் நின்று இறந்தவர்களின் உடலை வழியனுப்பி வைக்கும் நிலைதான் பெண்களுக்கு உள்ளது. அவர்கள் சுடுகாட்டுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சுடுகாடுகளிலும், தகனமேடைகளிலும் எரியூட்டும் பணியாளராகச் சில பெண்கள் இப்போது பணியாற்றி வருவது, ஒரு மைல்கல். அப்படியாக, தகன மேடையில் எரியூட்டும் வேலையை அர்ப்பணிப்புடனும் நேர்த்தியாகவும் வருபவர்தான் திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணகி.

“அக்கம், பக்கம் இருக்குறவங்க, என்னைப் பார்க்குறவங்க எல்லாம் ஒருவேளை இழிவா நினைச்சாலும், இறந்தவங்களுக்குக் கண்ணியம் குறையாம தகனம் செய்ற இந்த வேலையை நான் மேன்மையானதா பார்க்குறேன்” என்கிறார் கண்ணகி.

“அம்மா படிக்காதவங்க. அப்பா, எனக்கு 10 வயசு இருக்கும்போது இறந்துட்டாங்க. அப்பா இல்லாம அம்மாவே ஒத்தை மனுஷியா நின்னு என்னைய எம்.ஏ வரைக்கும் படிக்க வெச்சாங்க. என் தைரியமும், `பொண்ணுன்னா இதைச் செய்யக் கூடாதா?’னு கேட்குற துணிவும் இப்போ இந்த வேலையை என்னை பார்க்கவெச்சுட்டு இருக்கு. சின்ன வயசுல இருந்தே என்கிட்ட ஒப்படைக்குற வேலையை சரியா செய்து முடிக்கணும்ங்கிற வைராக்கியம் இருக்கும். அப்படித்தான் இந்த வேலையையும் செஞ்சிட்டு இருக்கேன்” என்கிறார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *