Share on Social Media

சவுதி உள்ளே வெளியே என மாற்றி மாற்றி ஸ்விங் செய்து மிரட்டினார். அவருக்கு ஒத்துழைப்பாக ஜேமிசனும் வேக்னரும் காற்றிலேயே மேஜிக் செய்தனர். ஆனால், ரோரி பர்ன்ஸ் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பாடி லைனில் வந்தால் மட்டுமே பந்தை தொட்டார். ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு இன்ச் வெளியே சென்றாலும் லீவ் மட்டுமே அதற்கான பதில். இப்படி ஆடுவதற்கு மனதளவில் பெரும் முதிர்ச்சியும் பொறுமையும் வேண்டும். அது பர்ன்ஸிடம் நிறையவே இருந்தது.

ரோரி பர்ன்ஸ்

ரோரி பர்ன்ஸ்

ஒரு கட்டத்தில் ஜேமிசனின் ஓவரில் ஆறு பந்துகளையும் கூட லீவ் செய்தார். இப்படி நிலைத்து நின்று மெது மெதுவாக பர்ன்ஸ் ஒரு 80 ரன்களை தாண்டும் போது இங்கிலாந்து அணிக்கு 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது. இதன்பிறகுதான் கொஞ்சம் வேகமெடுத்து சதத்தை நெருங்கினார் பர்ன்ஸ். 90 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்திருந்த பர்ன்ஸ் 267 பந்துகளில் சதத்தை தொட்டார். 177 பந்துகளில் 48 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

ஆஸ்திரேலிய சீரிஸில் புஜாரா 174 பந்துகளில் அரைசதம் கடந்திருப்பார். சமீபத்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால், ரோரி பர்ன்ஸ் நேற்று அதையும் தாண்டிவிட்டார். புஜாராவை தாண்டிய ஒரு பொறுமை…புஜாரவை தாண்டிய ஒரு நிதானம்!

100 ரன்களை கடந்த பிறகு டிவில்லியர்ஸ் போன்று சுற்றிமுற்றி வெறித்தனமாக ஷாட்களை ஆடினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போனாலே பேட்டை தூக்கி சரண்டர் ஆன பர்ன்ஸ், ஜேமிசன் ஓவரில் ஒயிடு லைன் வரை நகர்ந்து வந்து ஸ்லாக் ஸ்வீப் ஆடி சிக்சர் அடித்தார். 297 பந்துகளில் 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி விக்கெட்டாக சவுத்தியின் பந்துவீச்சில் வீழ்ந்தார் பர்ன்ஸ்.

ஆரம்பத்தில் ஒரு இயல்பான ஆட்டம், பின்னர் ஒரு அசாத்தியமான நிதானத்தோடு பொறுப்பான ஆட்டம், கடைசியில் டி20 பாணியிலான ஃபினிஷ் என மிரட்டியிருந்தார் பர்ன்ஸ். 200 ரன்களுக்கும் மேல் லீட் கொடுத்து இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய இங்கிலாந்து அணியை பொறுப்பான சதத்தின் மூலம் மீட்டெடுத்திருக்கிறார் பர்ன்ஸ். இப்போது ஆட்டம் ட்ரா ஆவதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கிறது. இந்த இன்னிங்ஸின் மூலம் லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டிலும் ரோரி பர்ன்ஸ் பெயரை பதித்துவிட்டார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *