Tamil News No20 29 948116481304169 Tamil News Spot
Share on Social Media

புதுடெல்லி: ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்பிறகு மாநில அரசுகள் தங்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய இழப்பீட்டை போராடி பெற்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை காரணம் காட்டி, மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது.

மாறாக, வருவாய் இழப்பீடான ரூ.2.35 லட்சம் கோடி இழப்பீடு அல்லது ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ஏற்பட்ட ரூ.97,000 கோடி இழப்பீடு பெற விரும்பும் மாநிலங்கள், ரிசர்வ் வங்கி மூலம் அல்லது பத்திர வெளியீடு மூலம் கடன் திரட்டிக்கொள்ள யோசனை கூறியது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் சந்தையில் இருந்து ரூ.1.1 லட்சம் கோடி திரட்டி, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. கடந்த மாதம் 23ம் தேதி முதல் தவணையாக மத்திய அரசு கடன் மூலம் திரட்டிய ரூ.6,000 கோடியை ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றுக்கு வழங்கி வருகிறது. தற்போது 2வது தவணையாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,000 கோடி நேற்று வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *