Share on Social Media


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் ஷோபனா (13). குத்தாலம் அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 7-ம் தேதி இரவு 9 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமா பாலசுப்ரமணியன் வீட்டுக்குச் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

பிரபாகர்

Also Read: தனது அப்பா, அரசியல் பிரமுகர்கள் என 28 பேரால் பாலியல் வன்கொடுமை; 17வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்!

இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சிறுமியின் உறவினர்கள் அன்றிரவே குத்தாலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடிய உறவினர்கள், சிறுமியின் மாமா பாலசுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து, சிறுமியின் உடலை போலீஸார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கிய குத்தாலம் இன்ஸ்பெக்டர்  வள்ளி, மயிலாடுதுறை  இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீஸார், வில்லியநல்லூர் கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டுக்குத் தூக்கி வந்துவிட்டதால் வாய்க்காலில் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் தொடர் விசாரணை செய்து வந்தனர்.

vikatan 2019 05 10d93b9f 0754 4f27 b899 dffcbf5f9774 133761 thumb Tamil News Spot
child abuse (Representational Image)

இந்த நிலையில், அப்பகுதியிலுள்ள  சிலரை போலீஸார், ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதால்  சந்தேக மரணம் என்று பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. விசாரணையில் அச்சிறுமியின் உறவினரான பிரபாகர் சம்பவத்தன்று சிறுமி ஷோபாவைத் தனியாக வரச்சொல்லி சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

சம்பவம் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் கேட்டோம். “இது ஒரு சவாலான வழக்குதான். செல்போன் பயன்பாடு இல்லை. கண்ணால் பார்த்த சாட்சிகள் இல்லை. இருந்தும் ஒரு வாரத்தில் குற்றவாளியைக் கைது செய்திருக்கிறோம். பம்ப் பிட்டர் வேலை செய்யும் பிரபாகர் அதே ஊரைச் சேர்ந்தவன்தான். ஷோபனாவுக்கு உறவினரும்கூட. ஷோபனா வயதுக்கு வந்து ஓராண்டே ஆனநிலையில் ஷோபனாவைக் காதலிப்பதாகக்கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். இதுபற்றி பிரபாகரன் தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறான். அவரது, நண்பர்கள் அந்த சிறுமி கர்பமாகிவிடுவார் எனக்கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே, `கர்ப்பமாகிட்டா மாட்டிக்குவேன் என்ற பயத்தில் ஷோபாவைத் தனியாக வரச்சொல்லி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொலை செய்தேன்’ எனத் தெரிவித்தார் பிரபாகர்.

sp office 3 Tamil News Spot
sp office

பிரபாகரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அவனைக் கைது செய்து நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *