Share on Social Media

டோக்கியோ ஒலிம்பிக்கில் 13 வயது ஜப்பான் வீராங்கனை தங்கம் வென்று சாதித்தார். ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் நடக்கிறது. இதில் ‘ஸ்கேட்போர்டிங்’ விளையாட்டு அறிமுகமானது. இதன் ‘ஸ்டிரீட்’ பிரிவில் ஜப்பான் வீராங்கனை மோமிஜி நிஷியா 13, தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் ‘ஸ்கேட்போர்டிங்’ விளையாட்டில் தங்கம் வென்ற முதல் வீராங்கனையானார். தவிர இவர் (13 ஆண்டு, 330 நாட்கள்), இளம் வயதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் அமெரிக்க ‘டைவிங்’ வீராங்கனை மார்ஜோரி கெஸ்ட்ரிங் (13 ஆண்டு, 268 நாட்கள், 1936 பெர்லின் ஒலிம்பிக்), ஜெர்மனி படகு போட்டி (‘காக்ஸ் பேர்ஸ்’) வீரர் கிளாஸ் ஜெர்டா (13 ஆண்டு, 283 நாட்கள், 1960 ரோம் ஒலிம்பிக்) உள்ளனர்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *