Share on Social Media


சின்னமனுார்-தேனி மாவட்டத்தில் 12,604 மண் மாதிரிகளின் ஆய்வக பரிசோதனை முடிவுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தேவையற்ற உரங்களை தவிர்த்து, தேவையானவற்றை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி அதிக பயிர்உற்பத்திக்கு மத்திய ,மாநில அரசுகள் திட்டம் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக மண்ணின் வளம் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்தில் பரிசோதனை செய்து அதற்கேற்ப பரிந்துரைகளை விவசாயிகளுக்கு கூறிவருகின்றனர். மண் பரிசோதனையில் என்ன சத்து குறைவாக உள்ளது, எது அதிகமாக உள்ளது,

தேவையான பிற சத்துக்கள் எவை என்பது பற்றி பரிந்துரை செய்யப்படும். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் எந்த அளவு தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். இதன்மூலம் விவசாயிகள் தேவையில்லாதவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து அதிக மகசூல் எடுக்க முடியும்.சின்னமனுார் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறுகையில், ‘‛இந்தாண்டு தேனி மாவட்டத்தில் 12,604 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைநடந்துள்ளது. தற்போது அவற்றின் முடிவுகள் விவசாயிகளுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆலோசனையை பயன்படுத்தி அவர்கள் பயன்பெற வேண்டும்,” என்றார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *