Share on Social Media

மற்றுமொன்று கருச்சிதை ஆபத்து கணிசமாக குறையும் நேரம் இது. இதுவரை உங்கள் கர்ப்பத்தை நீங்கள் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தால் இப்போது தெரிவிக்கலாம். மகிழ்ச்சியான தருணம் இது என்றும் சொல்லலாம். இந்த வாரத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்களும் அறிகுறிகளும் குறித்து பார்க்கலாம்.

​12 வார கர்ப்பத்தின் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சி இந்த 12 வது வாரத்தில் குழந்தையின் உறுப்புகளுடன் இருக்கும். குழந்தையின் பாலியல் உறுப்புகள் ஏற்கனவே வெளிப்புறமாக காட்டலாம். இதுவரை இல்லையெனிலும் இனி தெரியக்கூடும். ஹார்மோன் செயல்பாட்டை பொறுத்து எந்த நிமிடமும் இது தெரியலாம்.

கருவிலிருந்து குழந்தையாக வளரத்தொடங்கும் 9 வது வார கர்ப்பம், அறிந்துகொள்வோமா?

குழந்தை உறிஞ்சுவது போன்ற அனிச்சைகளை செயல்பட தொடங்கும். குழந்தையின் சிறுநீரகங்கள் செயல்படக்குடும். இப்போது அவை சிறுநீரை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கலாம். 12 வது வாரத்தின் இறுதில் விரல்களில் நகங்களும் வெளிப்படக்கூடும்.

​12 வது வார குழந்தையின் அளவு

12-

12 வது கருவானது எப்படி இருக்கும் என்பது குறித்து எல்லோருக்கும் ஆவல் உண்டு. இந்த வாரத்தில் குழந்தை ஆப்ரிகாட் பழத்தின் அளவு இருக்கும். 12 வது வார முடிவில் குழந்தை 2 அங்குலத்திலிருந்து 3 முதல் 3.5 அங்குலம் வரை வளர்ந்திருக்கலாம். குழந்தையின் எடை 28 முதல் 29 கிராம் வரை இருக்கலாம்.

குழந்தையின் உடல் செரிமான அமைப்பை உருவாக்கியிருக்கும். எலும்பு மஜ்ஜை ஏற்கனவே இரத்த அணுக்களை உருவாக்க தொடங்கியிருக்கும்.

​12 வார கர்ப்பத்தின் உடல் மாற்றங்கள்

12-

உடல் மாற்றங்கள் இந்த நேரத்தில் முதல் மூன்று மாதங்களின் முடிவில் ஓருவித மாற்றத்தை வெளிப்படுத்தும். இது குழந்தையின் மூளை வளர்ச்சியால் உணரலாம். கர்ப்பகாலத்தில் உடல் மாற்றங்களில் எடை அதிகரிப்பும் ஒன்று. சுமார் 500 கிராம் அல்லது 1 கிலோ அளவில் எடை அதிகரிக்கலாம்.

கருப்பை வளர்ந்துவருகிறது. அடி வயிற்றில் நீங்கள் கருவின் வளர்ச்சியை அதன் வலிமையை உணருவீர்கள். வயிற்றுபகுதியில் கச்சிதமான அளவில் பொருந்தும் ஆடைகள் இப்போது உங்களுக்கு இறுக்கமாக இருக்கலாம்.

​12 வார கர்ப்பிணிக்கு உண்டாகும் அறிகுறிகள்

12-

சருமத்தின் நிறத்தில் மாற்றம் உண்டாகலாம். மெலனின் தற்காலிகமாக அதிகரிக்க கூடும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இது உண்டாகிறது. தாய்ப்பால் உற்பத்தி தொடங்குவதால் மார்பகங்களில் புண் உணர்வீர்கள். அதிகரித்த நிறமி காரணமாக மார்பகத்தில் முலைகாம்புகளை சுற்றியுள்ள பகுதிகளில் கருமை இருக்கும். இதோடு ஏற்கனவே எதிர்கொண்ட அறிகுறிகள் தொடரலாம்.

யோனி தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க யோனி வெளியேற்றம் உண்டாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் பல பெண்கள் தலைவலி உபாதையை சந்திப்பார்கள்.

மார்பகத்தில் புண்ணை ஏற்படுத்தும் கர்ப்பத்தின் 10 வது வாரம், வேறு அறிகுறிகளும் தெரிஞ்சுக்கங்க!

சில பெணக்ள் யோனிப்பகுதியிலிருந்து சில துளி உதிரபோக்கு வெளியேறுவதை பார்ப்பார்கள். இது கருச்சிதைவு அல்ல. அதிகரிக்கும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.

இரத்த ஓட்டம் வயிற்றில் இருக்கும் கருவுக்கும் பாய்வதால் தலைச்சுற்றல் மற்றும் சோர்வு பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.

​12 வாரத்தில் வயிறு பெரிதாகுமா?

12-

கருவில் இரட்டை குழந்தையை சுமந்திருந்தால் கண்டிப்பாக முன்கூட்டியே வயிறு அமைப்பு தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு இந்த வாரங்களில் வயிறு பெரிதாவதை உணரலாம். இதை வெளியிலிருந்து பார்க்கும் போது முழுமையாக உணர முடியாவிட்டாலும் உள்ளுக்குள் நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

உங்கள் ஆடையின் இறூக்கம் இதை காண்பித்து கொடுக்கும். அதோடு வயிறு தெரியாவிட்டாலும் அடிவயிறு கனம் அதை காண்பித்து கொடுக்கும்.

​12 வார கர்ப்பத்தில் அல்ட்ராசவுண்ட்

12-

இந்த வாரத்தில் அல்ர்டாசவுண்ட் பரிசோதனை நீங்கள் செய்தால் குழந்தையின் அனைத்து உறுப்புகளையும் சரியான முறையில் வளர்ச்சி அடைகிறதா என்பதை பார்க்கலாம். குழந்தையின் வளர்ச்சியோடு குழந்தையின் திசுக்களும் முதிர்ச்சியடையும். குழந்தையின் மூளை வரும் வாரங்களில் மேலும் வளரும்.

வயிற்றில் குழந்தை கால் விரல்களை சுருட்டி, மூடுவது போன்ற விரல் அசைவுகளை செய்யலாம். குழந்தை வயிறு வழியாக உங்கள் தொடுதலுக்கு எதிர்வினையாக வளர்ந்திருக்கும். இது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் தெரியும்.

​12 வார கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்

12-

கர்ப்பகாலம் முழுக்கவே ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுக்க வேண்டும். சிலருக்கு 12 வது வாரத்தில் என்ன மாதிரி உணவுகளை எடுத்துகொள்வது என்னும் கேள்வி தொடர்ந்து இருக்கும். இந்த காலத்தில் உணவின் மீது வெறுப்பு இருந்தாலும் கண்டிப்பாக சத்தான உணவுகள் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.

வைட்டமின், தாதுக்கள், பழங்க, பச்சை இலை காய்கறிகள் சேர்க்கலாம். துரித உணவுகள் தவிர்த்து கொட்டைகள், தயிர் மற்றும் சூரியகாந்தி விதைகள் சேர்க்கலாம்.

குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகள் உதவுவதால் மெலிந்த புரதம் கொண்ட கோழி இறைச்சி மற்றும் மீன் சேர்க்க மறக்க வேண்டாம். மலச்சிக்கல் வராம்ல் இருக்க நார்ச்சத்து உணவை எடுத்துகொள்ளுங்கள். எடை அதிகரிக்கும் வகையில் உணவு அதிகம் சேர்க்க வேண்டாம். மொத்தத்தில் இந்த முதல் மூன்று மாதங்களை நீங்கள் சற்று கடினமாக கடந்திருப்பீர்கள். இனி இந்த உபாதை படிப்படியாக மறையும்.

​12 வது வார கர்ப்பத்தில் எச்சரிக்கை

12-

இரத்த சர்க்கரயை கட்டுக்குள் வைத்திருக்க ஒரே நேரத்தில் சாப்பிடாமல் சிறிது சிறிதாக சாப்பிடுங்கள். வாய்வழி ஆரோக்கியம் முக்கியம். ஹார்மோன்களால் ஈறுகளில் இரத்தப்போக்கை எதிர்கொள்ள வாய்ப்புண்டு என்பதால் வாய்ப்பகுதியை சுத்தமாக பராமரியுங்கள்.

கர்ப்பிணி வயிற்றில் இருண்ட கோடு விழும் 11 வது வாரம், இந்த காலத்தில் உறவு கொள்ளலாமா?

உங்களுக்கு மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தால் அதை அடியோடு ஒழித்துவிடுங்கள். உடல் வியர்க்கும் வகையில் வைத்திருக்க வேண்டாம் இது குழந்தையை பாதிக்க செய்யும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *