Share on Social Media


புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் 2வது அலை காரணமாக, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ‘ஜூலை 15 – ஆக., 26க்குள் தேர்வுகளை நடத்தி, செப்டம்பரில் முடிவுகளை வெளியிடலாம்’ என, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் கோவிட் தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்’ என, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில் பிளஸ்டூ தேர்வுகளை ரத்து செய்யலாமா ,வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத்தேர்வை நடத்த மாற்று வழி உண்டா என்பது குறித்தும், மாநிலங்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ கருத்துக்களையும், பிரதமர் ஆய்வு செய்தார்.

12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து

இறுதியில் கோவிட் சூழல் மற்றும் மாணவர்களின் உடல் நலம் பாதுகாப்பு முக்கியம் என கருதி,12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 12 வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *