Share on Social Media


12 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவை இயக்கிய கவுதம் மேனன்

09 டிச, 2020 – 11:41 IST

எழுத்தின் அளவு:


Gautham-menon-directs-Suriya-after-12-years

ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் கூட்டணியாக வலம் வந்தவர்கள் நடிகர் சூர்யாவும் இயக்குனர் கவுதம் மேனனும். காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்து பணியாற்ற முடிவெடுத்த சமயத்தில் கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினார் சூர்யா.

மீண்டும் இந்த கூட்டணி இணைந்து ஒரு படம் தரமாட்டார்களா என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து வந்த நிலையில், நவரசா என்கிற ஆந்தாலஜி படத்திற்காக இருவரும் இணைந்துள்ளனர். நவரசா படப்பிடிப்பு தளத்தில், சூர்யாவை, கவுதம் மேனன் இயக்கும் புகைப்படம் ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நீண்ட சுருள்முடியுடன் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் இருக்கிறார் சூர்யா. கிட்டத்தட்ட வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்..





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *