Share on Social Media


கொழும்பு: இலங்கையில் 11 மாவட்டத்திற்கு மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 26 பேர் மழையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 17 மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் முகமை தெரிவித்துள்ளது. இதன்படி, 60 ஆயிரத்து 264க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை, குருநாகல், ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 23 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

1,253 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. வரும் நாட்களில் மேலும் கன மழை பெய்யும் என்பதால் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளதாக டிஎம்சி துணை இயக்குனர் பிரதீப் கொடிபிலி கூறினார். இதற்கிடையில் இலங்கை கடற்படை, பேரிடர் மீட்புக் குழு ஆகியன வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *