Share on Social Media


திருப்போரூர்–திருப்போரூர் அடுத்த சிறுசேரி, ‘சிப்காட்’ வளாகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 98வது பிறந்த நாளை முன்னிட்டு, வனத்துறை ஏற்பாட்டில், 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க விழா, நேற்று நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி முன்னிலை வகித்தனர். ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.சிப்காட் வளாகத்தில், 500 நீர்மருது, 300 புங்கன்,100 நாவல்- உட்பட, ஏழுவகையான மரங்கள் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளன.அதேபோல், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த காவணிப்பாக்கத்தில், வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் இலுப்பை, நாவல், பலா என, 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ச்சியாக, 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் நரசிம்மன் தெரிவித்தார்.திருவள்ளூர்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் முழுதும் 1,000 மரக்கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதன் துவக்க விழா, திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் பொன்னையா தலைமை, மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி முன்னிலை வகித்தனர். பால்வளத்துறை அமைச்சர் நாசர், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில், எஸ்.பி,. வருண் குமார், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *