Share on Social Media


அந்த அளவுக்கு ஒரு சிறப்பான பெயரைப் பெற்றிருக்கின்றோம். அந்த பெயரைக் காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணமாக இருக்கிறது. என்னுடைய பணிக்குத் தோளோடு தோள்கொடுத்து துணை நிற்கும் அமைச்சர்கள். பல்வேறு காட்சிகளைச் சார்ந்திருக்கக் கூடிய தலைவர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள். அதனைப் பேருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சிக்கு வரும்போது கொரோனா பெருந்தொற்று நம்மைச் சூழ்ந்து இருந்தது. அதனை எதிர்கொள்ளப் போர்க்கால அடிப்படையில் நாமெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். முதல் ஒருமாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம் மட்டுமே. அந்த சத்தம் நம்மை நிம்மதியாக இருக்க விடவில்லை.”‘ என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து, “அதையும் தாண்டி மருத்துவமனைகளில் இடம் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, என்று இப்படி ஏதாவது ஒரு செய்தி வந்து நம்மை வாட்டி வதைத்துக் கொண்டே தான் இருந்தது. இதையெல்லாம் சமாளிப்பதற்குத் தான் உடனடியாக ஒரு வார் ரூம்மை தொடங்கியிருந்தோம். மக்களின் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்டோம். அந்த கோரிக்கைகளை முடிந்த அளவு நிவர்த்தி செய்தோம். இன்னும் சொல்லவேண்டும் என்றால், கோரிக்கைகளே வராத சூழலை இப்போது உருவாக்கியுள்ளோம். லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியதும், அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும் தான் இந்த நூறு நாளில் நாம் செய்த பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *