Share on Social Media


ஆதி காலத்திலிருந்து நகர நாகரிகத்துடன், தனித்த பண்பாட்டுடன் சிறந்து விளங்கிய முதுநகரங்களில் மதுரை முக்கியமானது. மதுரையை மையமாக வைத்து பல்வேறு மன்னர்களின் ஆட்சிகள், சமயங்கள் வாழ்ந்து மறைந்துள்ளன. அதன் அடையாளங்கள் மதுரையைச் சுற்றி நிறைய உள்ளன. மண்ணிலும் புதைந்தும் கிடக்கின்றன.

அந்த வகையில்தான் வைகை நதி கரையோர தமிழர்களின் நாகரிகத்தை முழுமையாக கண்டறிய கீழடியில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. பல அறிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இது ஒருபக்கமென்றால், தமிழர்களின் வரலாற்று எச்சங்களாக புரதானமான கல்வெட்டுகள், சின்னங்கள், சிற்பங்கள், இடிந்த மண்டபங்கள், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மகாவீரர் சிற்பம்

மகாவீரர் சிற்பம்

இதை ஆய்வு செய்த பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரனிடம் பேசினோம். “வேளாம்பூரில் பழைமையான சிற்பம் இருப்பதாகக் கவசக்கோட்டை விவசாயி ராதாகிருஷ்ணன் தகவல் சொன்னார். உடனே தொல்லியல் ஆர்வலர்கள் நாகபாண்டி, சிவக்குமார் ஆகியோருடன் வேளாம்பூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பின்புறமுள்ள முட்புதரில் சிதைந்த நிலையில் மகாவீரர் சிற்பத்தைக் கண்டோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *