Share on Social Media


ஒரு கோடி, ‘டோஸ்’ தடுப்பூசிகள் கேட்டு, டில்லிக்கு வந்து மனு கொடுத்து விட்டு, அடுத்த இரண்டு நாட்களில், 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கும்படி, தி.மு.க., – எம்.பி., கோரிக்கை வைத்துள்ளது, டில்லி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு, 23ல் டில்லி வந்திருந்தார். அப்போது, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், ஹர்ஷ் வர்தன், ராஜ்நாத் சிங் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து சந்தித்தார்.சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனை சந்தித்தபோது அளித்த கோரிக்கை மனுவில், ‘தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ‘தமிழகத்திற்கு என குறைந்தபட்சம், 1 கோடி டோஸ் தடுப்பூசிகளையாவது உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

குழப்பம்

இந்நிலையில் சென்னை திரும்பிய டி.ஆர்.பாலு, 23ம் தேதி, மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். அப்போது, ‘மாதத்திற்கு, 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் வீதம், அடுத்த நான்கு மாதங்களுக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்’ என, வலியுறுத்தியதுடன், இது தொடர்பான கோரிக்கை மனுவையும் அனுப்பி வைத்தார்.

இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது;கடந்த வாரம் டில்லியில், மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த பாலு, ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனை தொடர்பு கொண்டபாலு, 10 கோடி தடுப்பூசி வேண்டுமென கேட்டது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் கோரிக்கை மனுவில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. இரண்டாவது மனுவில் குஜராத், ம.பி., ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களை ஒப்பிட்டு, தமிழகம் புறக்கணிக்கப் படுவ தாக குறை கூறப்பட்டுள்ளது.ஒரு கோடியாக இருந்த தடுப்பூசிகளுக்கான தேவை, இரண்டே நாட்களில், 10 கோடியாக அதிகரித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.

கோரிக்கை

தடுப்பூசிகளுக்கான தேவை குறித்து மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தாமல், இரண்டாவது மனு அளிக்கப்பட்டிருக்கக் கூடும். பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாக வைத்து அரசியல் காரணங்களுக்காக, இரண்டாவது கோரிக்கை மனு எழுதப்பட்டிருப்பது போல தெரிகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
– நமது டில்லி நிருபர் –

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *