Share on Social Media


புதிதாகக் குடியேற இருக்கும் வீட்டு உரிமையாளருக்கு அட்வான்ஸ் வழங்குவதற்காக பர்ஸில் கொண்டு சென்ற ரூ.30,000 பணத்தைப் பெண் ஒருவர் தவறவிட்டார். அதைக் கண்ட பெண் காவலர் ஒருவர், அந்த பர்ஸை எடுத்து அந்தப் பெண்ணிடம் வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ

பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ

கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர், கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். இவருக்கு பெண், ஆண் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வறுமை நிலைமையில் உள்ள இவர், தன் குழந்தைகளோடு, புலியூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கரூரில் உள்ள வையாபுரி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு பேசி, அங்கு தங்க முடிவெடுத்துள்ளார். அதற்கு, அந்த வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸாக ரூ.30,000 கேட்டிருக்கிறார். அந்த தொகையை சிரமப்பட்டு தயார் செய்த புவனேஸ்வரி, அதை வீட்டு முதலாளியிடம் கொடுப்பதற்காக, கடந்த திங்கள் மாலை 5:30 மணி அளவில், கருர் வையாபுரி நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

ரூ.30,000 பணம் மற்றும் டெபிட் கார்டு இருந்த அந்த பர்ஸ் எங்கேயோ தவறிவிழுந்துவிட்டது. வையாபுரி நகர் சென்றபிறகுதான், புவனேஸ்வரிக்கு அது தெரியவந்திருக்கிறது. இதனால் பதற்றமான புவனேஸ்வரி, அங்கேயே அழுதிருக்கிறார். வீட்டு ஓனர் அவரை தேற்றிய பிறகு, “நாளைக்கு நகையை அடகுவெச்சு பணத்தை கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்ற பிறகும், அவருக்குப் பதற்றம் குறையவில்லை.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *