Share on Social Media

தமிழ்நாட்டில் வி.கே.சி காலணிகளின் விற்பனைச் சந்தை விரிவானதும்கூட ஒரு சுவாரஸ்யமான கதைதான். கேரளாவைவிட தமிழ்நாட்டில் அதிக காலணிகளை விற்பனை செய்ய முடியும் என்று நௌஷத்துக்குத் தோன்றியது. விநியோகஸ்தர்களை அணுகினார். அவர்கள் காலணிகளுக்கான அடக்க விலையை இன்னும் குறைக்கச் சொன்னார்கள். அதிகமாகக் கடன் கேட்டார்கள். நிறைய தள்ளுபடி எதிர்பார்த்தார்கள். தானே நேரடியாகக் களத்தில் இறங்குவது என்று முடிவு செய்தார் நௌஷத்.

பத்து ரூபாய் கொடுத்து தமிழ்நாடு மேப் ஒன்றை வாங்கினார். ஒவ்வொரு மாவட்டத்தையும், தாலுகாவையும், நகரத்தையும், சின்னஞ்சிறு ஊரையும் நன்றாக ஆராய்ந்தார். ஊர் ஊராகப் போக முடிவெடுத்தார். ஒவ்வொரு சிறு ஊரிலும் இருந்த செருப்புக் கடைகளுக்கும் தன் ஆட்களை அனுப்பினார். அவரும் நேரடியாகப் பல ஊர்களுக்குச் சென்றார். நௌஷத்தின் ஆட்கள் தங்கள் காலணிகளைக் காட்டினார்கள். அதன் நன்மைகளை விவரித்தார்கள். கடைக்காரர்களிடம் பேரம் பேசினார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் நடைபெற்ற இந்தக் களப்பணிக்கு வெற்றியும் கிடைத்தது. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டொன்றுக்கு 600 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடத்துகிறது வி.கே.சி நிறுவனம்.

முகம்மது கோயா

முகம்மது கோயா

சந்தையைப் புரிந்துகொள்ளுங்கள்!

“பல நிறுவனங்கள் தங்களுடைய பாதுகாப்பான தளத்தில் இருந்துகொண்டு வியாபாரம் செய்ய நினைக்கின்றனவே தவிர, போதுமான நேரத்தைச் செலவழித்து சந்தை நிலவரத்தை அறிந்துகொள்ள முயல்வதில்லை’’ என்கிறார் நௌஷத்.

இன்றைக்கு இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.2,000 கோடிக்குமேல் டேர்ன் ஓவர் செய்கிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் யூனிட்டுகளை அமைத்து, 6,000-க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

இந்த வெற்றிக்கு நௌஷத் அழுத்தமாகச் சொல்லும் ஒரு காரணம் இதுதான்… “எங்களுடைய வாடிக்கையாளர்களே, எங்களின் பிராண்ட் அம்பாசடர் ஆனார்கள். அதனால்தான் நாங்கள் வளர்ந்தோம்.’’

என்ன ஒரு அனுபவபூர்வமான வார்த்தை!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *