Share on Social Media


தமிழ்நாட்டில் குன்னூர் அருகே காட்டேரி மலைத்தொடரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், விபத்து குறித்த அறிக்கையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

இன்று கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் ஹெலிகாப்டர் விபத்துகுறித்து மக்களவையில் விளக்கமளித்த ராஜ்நாத் சிங், “ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முப்படைகளின் விசாரணைக்கு விமானப்படை ஏர்மார்ஷல் மன்வேந்த்ரா சிங் தலைமையில் உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில், 13 பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர்.

விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து அனைவருமே அருகில் இருக்கும் வெலிங்டன் ராணுவ மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தீவிர அவசர சிகிச்சை அளித்தபோதும், துர்திஷ்டவசமாக அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். அதில், கேப்டன் வருண் சிங் ஒருவர் மட்டும் தற்போது உயிருடன் இருக்கிறார். பலத்த காயங்களுடன் இருக்கும் அவரை காப்பாற்ற, தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

p10 Tamil News Spot
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகள்

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, விமானப்படைத் தளபதி தலைமையில் தற்போது விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரி மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். அதன்படி, விபத்துக்கான காரணங்கள் பற்றி விரைவில் கண்டறியப்படும்” என தெரிவித்தார்.

vikatan 2019 05 727a4729 7adb 40dc 86d5 41893b9e2473 70330 thumb Tamil News Spot
ராஜ்நாத் சிங்

மேலும், “ உயிரிழந்தவர்களின் உடல்கள் தமிழகத்திலிருந்து இன்று டெல்லி கொண்டுவரப்படும். முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கும் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்” எனவும் மக்களவையில் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.