Share on Social Media


என் நண்பர்களை நான் இழந்த சோகங்கள் நடந்தது என்று ஆரம்பிக்கிறார்… கணேசன், கர்னல்(ஒய்வு)

“தரைப்படையில் அப்போது நான் பணியில் இருந்த காலகட்டம். இங்கே இருக்கும் உயர் அதிகாரிகள், இந்திய ராணுவத்தில் உள்ள ஹெலிகாப்டர் பைலட் ஆக போவார்கள். அப்படித்தான், என்னுடைய சக தோழர் கேப்டன் சக்கரவத்தி போக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஒருநாள், நானும் அவரும் நாசிக் நகரில் உள்ள அதிகாரிகள் ராணுவ மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். ‘ இன்றைய தினத்திற்கான கடைசி ரவுண்ட் பயிற்சி முடித்துவிட்டு வருகிறேன். நீங்கள் இங்கேயே காத்திருங்கள் ‘ என்று சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பிப்போனார் சக்கரவர்த்தி.

கணேசன், கர்னல்(ஒய்வு)

கணேசன், கர்னல்(ஒய்வு)

நானும் காத்திருந்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். கொஞ்ச நேரத்தில், அவர் ஒட்டிய பயிற்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவல் வந்தது. அப்போது, அவரின் மனைவி கர்ப்பவதியாக இருந்தார். கடைசி நேரத்தில் அவருடன் இருந்த நினைவுகள் எனக்கு மறக்கமுடியாதவை. அடுத்து, இன்னொருவர் கேப்டன் புனித் கரோல். பயிற்சி முடித்துவிட்டு, உத்தரகாண்டில் ராணுவ பைலட் ஆக பணியில் இருந்தார். அவர் ஒட்டிய ஹெலிகாப்டர் ஒருநாள் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிக்கி அவரும் இறந்தபோனார். அவருக்கு இளம்வயதில் மனைவி இருந்தார். அவரின் குடும்ப சூழ்நிலையை நினைத்து வேதனைப்பட்டேன்.

இன்னொரு நண்பர், கடற்படையில் விமானம் ஒட்டும் பயிற்சியில் இருந்தார். அவரும் பயிற்சி விமானம் கோவாவில் திடீர் விபத்தில் சிக்கி, அவரும் இறந்துபோனார். என்னை சுற்றியிருந்தவர்களில் இந்த மூவரின் மரணச் சம்பவங்கள் என் மனைதை மிகவும் பாதித்துவிட்டது. இந்த நண்பரின் மனைவி, தற்போது கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அருணாசலப் பிரதேசம் தவாங்கு என்கிற இடத்தில் 2011-ல் ஹெலிபேடில் இறக்கும்போது விபத்து ஏற்பட்டு, அதில் 19 பேர் இறந்தனர். இதேபோலவே, 2011-ல் இருந்து இதுவரை பல்வேறு இடங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதில் 55 பேர் இறந்துள்ளனர். பொதுவாக, வானில் பறக்கும் ஹெலிகாப்டர்களில் தொழில்நுட்ப கோளாறுகள் திடீர் திடீரென ஏற்பட்டு விடுகின்றன. எவ்வளவுதான் பராமரிப்பு இருந்தாலும், இதையெல்லாம் முற்றிலுமாக தவிர்க்கமுடியாது. எதிர்பாராதது. அப்படி ஒரு தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிற சூழ்நிலையில், கிராஸ் லேண்டிங் செய்யவேண்டிய அவசர நிலை வரும். அவ்வாறு கிராஸ் லேண்டிங் செய்யும்போது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதால், அதில் உள்ளவர்களுக்கு படுகாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி நேரத்தில், பயிற்சிபெற்ற விமானி ஒவ்வொருவரும் ஹெலிகாப்டரையும், அதில் பயணிப்பவரையும் காப்பாற்றுவதற்காக கடைசி நொடி வரை முயற்சி செய்வார்கள்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *