Share on Social Media

சீனாவைச் சேர்ந்த சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே வினேஷின் முட்டியில் பயங்கரமான எலும்பு முறிவு ஏற்பட்டு மல்யுத்தக் களத்திலேயே சரிந்து விழுந்தார். அந்த நொடியில் வினேஷ் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்தியாவுமே நொடிந்துதான் போனது. நடப்பதறியா மயக்க நிலையில் அவர் இருக்க சுற்றி நின்று மருத்துவக்குழு அவரை ஆய்வு செய்தது. பெரிய காயமாக இருப்பதால் ஸ்கேனுக்குப் பிறகே எதுவும் சொல்லமுடியும் என மருத்துவர்கள் கைவிரிக்க, ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வினேஷ் ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறியதால் சூன் யான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானது. காரணம், அதற்கு முந்தைய போட்டிகளிலெல்லாம் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார் வினேஷ். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எல்லாம் 11-0 என எதிரிக்கு இடமே கொடுக்காமல் எளிதாக வென்றிருந்தார். சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலுமே முதல் புள்ளியை வினேஷ்தான் எடுத்தார்.

ஒரு நொடி… ஒரு மூவ்… ஒரு காயம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. முழுமையாக ஆடி முடிவு சாதகமில்லாமல் போயிருந்தால் மனது தேறியிருக்கும். எதிர்பாராத அசம்பாவிதத்தால் ஒட்டுமொத்தக் கனவும் சுக்குநூறானதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பதக்கத்தோடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர், வீல் சேரில் மனமுடைந்து வந்து சேர்ந்தார்.

ஒலிம்பிக் கனவு கைகூடாமல்போனது ஒரு வலி என்றால், இனிமேல் இவரால் மல்யுத்தக் களத்தில் கால்பதிக்க முடியுமா என்கிற கேள்வி கொடுத்த வலி அவரைத் துளைத்தெடுத்தது. ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானது. காரணம், அதற்கு முந்தைய போட்டிகளில் எல்லாம் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார் வினேஷ்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 11-0 என எதிரிக்கு இடமே கொடுக்காமல் எளிதாக வென்றிருந்தார். சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலுமே முதல் புள்ளியை வினேஷ்தான் எடுத்தார். ஒரு நொடி…ஒரு மூவ்…ஒரு காயம் எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது. முழுமையாக ஆடி முடிவு சாதகமில்லாமல் போயிருந்தால் மனது தேறியிருக்கும். எதிர்பாராத அசம்பாவிதத்தால் ஒட்டுமொத்த கனவும் சுக்குநூறானதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பதக்கத்தோடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் வீல் சேரில் மனமுடைந்து வந்து சேர்ந்தார். ஒலிம்பிக் கனவு கைக்கூடாமல் போனது ஒரு வலி என்றால்… இனிமேல் இவரால் மல்யுத்த களத்தில் கால்பதிக்க முடியுமா? என்கிற கேள்வி கொடுத்த வலி அவரை துளைத்தெடுத்தது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *