Share on Social Media


ஸ்ரீகாளஹஸ்தி, மே: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நாளை முதல் தரிசன நேரம் மாற்றம் செய்யப்படுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி கோயில் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க நாளை முதல் (ஜூன் 1ம் தேதி) காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலிலும் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 3 மணிநேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அப்போது, ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளில் ஈடுபடலாம். கோயிலில் நடக்கும் மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவிட் விதிமுறைகளின்படி கோயில் தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும். ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேலும், மாநில அறநிலையத்துறை ஆணையாளர் அறிவுரையின்பேரில், இணையதளம் மூலம் பக்தர்கள்  ராகு-கேது சர்ப தோஷ பூஜைகள் உட்பட 12 விதமான ஆர்ஜித சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். பக்தர்களிடம் இணையதளம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு, இணையதளம் வாயிலாக கோத்திரம் பெயர்களுடன் பூஜைகள் நடக்கும். இதுதொடர்பான விபரங்கள் குறித்து தேவஸ்தானம் எண் 08578 -222240 மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *