NTLRG 20201006114539688824 Tamil News Spot
Share on Social Media

ஸ்ரீகாந்துடன் இணையும் வித்யா பிரதீப்

06 அக், 2020 – 11:45 IST

எழுத்தின் அளவு:


Vidya-Pradeep-joins-Srikanth

‘சைவம்’ படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ‘தடம்’ உள்பட பல படங்களில் நடித்தவர் வித்யாபிரதீப். சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சீரியல் பக்கம் போனவர் மீண்டும்சினிமாவுக்கு திரும்பி பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். ‘பவுடர்’ என்ற படத்தில் பேயாக நடிக்கும் அவர் அடுத்து ஸ்ரீகாந்துடன் இணைந்து ‘எக்கோ’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் திஷா பாண்டே, காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *