Share on Social Media

டோக்கியோ:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் ‘மாஸ்க்’  அணிய வேண்டும். இதனால் பதக்கம் வெல்லும் தருணத்தில் உணர்ச்சி பொங்க, முகமெல்லாம் புன்னகையுடன் ‘போஸ்’ கொடுக்க முடியாமல் வீரர், வீராங்கனைகள் தவித்தனர். இவர்களுக்காக சில தளர்வுகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. பதக்கம் வெல்பவர்கள் 30 வினாடிகள் மட்டும் ‘மாஸ்க்’ இல்லாமல் ‘போட்டோ’ எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘குரூப்’ போட்டோ எடுக்கும்போது மீண்டும் ‘மாஸ்க்’ அணிய வேண்டும்.

 

ஒரு நிமிடம் ‘பிரேக்’

டோக்கியோவில் வெயில்(30 டிகிரி செல்சியஸ்) கொளுத்துகிறது. டென்னிஸ் வீரர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ‘எண்ட்’ மாறும் போதும், ‘செட் பிரேக்கின்’ போதும் ஓய்வுக்கு 30 வினாடி மட்டுமே தருகின்றனர். இதற்கு ஜோகோவிச்(செர்பியா), டேனில் மெட்வடேவ்(ரஷ்யா) உள்ளிட்ட வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். போட்டிகளை ஏன் மாலை நேரத்தில் நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினர். இதையடுத்து ‘பிரேக்’ இடைவெளிக்கு கூடுதலாக 30 வினாடி அளிக்கப்பட்டுள்ளது. இனி ஒரு நிமிடம் ‘பிரேக்’ எடுக்கலாம்.

 

அண்ணனுக்கு அர்ப்பணம்

இந்தோனேஷிய பாட்மின்டன் வீரர் ஜோனாதான் கிறிஸ்டி வாழ்வில் கொரோனா ‘சுனாமியாக’ வீசியுள்ளது. ‘ஜி’ பிரிவில் பெற்ற முதல் வெற்றியை மறைந்த தனது அண்ணனுக்கு அர்ப்பணித்துள்ளார். இவர் கூறுகையில்,‘‘உடல்நிலை சரியில்லாமல் எனது அம்மா, அப்பா ஒரு மருத்துவமனையிலும், கொரோனா பாதிப்பால் அண்ணன் இவான் இன்னொரு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலையில் அம்மா, அப்பாவை கவனிப்பேன். மாலையில் இவானை பார்க்க செல்வேன். அம்மா மீண்ட பின், ஒரு வாரம் கழித்து தான் அண்ணன் மறைந்த செய்தியை சொன்னேன். அப்போது அவர் அழுததற்கு அளவே இல்லை. கடினமான சூழலில் எனது பயிற்சியை கூட நிறுத்த நேர்ந்தது. இப்போது பெற்ற வெற்றியை இவானுக்கு அர்ப்பணிக்கிறேன்,’’என்றார்.

 

தோழி உடன் ‘வீடியோ’

டோக்கியோ வந்த அமெரிக்க பீச் வாலிபால் வீரர் டெய்லர் கிராப், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இப்போது ‘தனிமையில்’ உள்ள இவர் கூறுகையில்,‘‘ஆயிரம் கனவுகளுடன் வந்தேன். இப்போது ஓட்டல் அறையில் 24 மணி நேரமும் அடைந்து கிடக்கிறேன். சாப்பிட மட்டுமே வெளியே வர முடிகிறது. வீடியோ அழைப்பு மூலம் தோழியுடன் உரையாடுகிறேன். அம்மாவிடம் ‘யோகா’ கற்கிறேன். நண்பர்களிடம் பேசி பொழுதை போக்குகிறேன்,’’என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *