Share on Social Media

இதன்பிறகு போட்டியை மெல்ல மெல்ல, தன் பக்கம் திருப்பத் தொடங்கியது இங்கிலாந்து. சென்ற போட்டியில் விட்டதைப் பிடிக்க வேண்டுமென்பது போல் ஆடினார் வியாட். கிரீஸை விட்டு இறங்கி வந்து ஆடியவர், பந்துகளை கேப்பில் அடித்து விட்டு, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார். விக்கெட் விழ வேண்டும் என பூனமைக் கொண்டு வந்தால், அவரது ஓவரை மிகச்சிறப்பாகவே அவர் கவனித்து அனுப்பினார்.

பத்து ஓவர்கள் முடிந்த நிலையில், அடிக்க வேண்டிய ரன்களில், பாதிக்கும் அதிகமாகவே இங்கிலாந்து சேர்த்து விட்டது. கேட்ச், ரன் அவுட்கள் என அவர்கள் அளித்த மிகமிகச் சிறிய அளவிலான வாய்ப்புகளையும் இந்தியா தவறவிட்டது. இங்கிலாந்தின் வெற்றிக்கான முன்னுரை, அவர்களது இன்னிங்ஸில் பிடித்த கேட்ச்களால் எழுதப்பட்டது என்றால், இந்தியாவின் முடிவுரை, அவர்கள் விட்ட கேட்சுகளால் எழுதப்பட்டது.

அருந்ததி ஒரு ஓவர் வீசியதுடன் காயத்தால் வெளியேறியதும் இந்தியாவுக்குப் பின்னடைவானது. எனினும், மிரட்டும் பௌலிங், அட்டாக்கிங் ஃபீல்டிங் என்பதற்கெல்லாம், அர்த்தமே தெரியாததைப் போல் தொடர்ந்தது இந்தியா. விக்கெட்டை வீழ்த்த, வியூகங்கள் எதுவும் வகுக்காமல், கையைத் தூக்கி சரண்டர் ஆகினர்.

உடைக்கவே முடியாத வியாட் – ஸிவர் கூட்டணி, இந்தியாவுக்கும், வெற்றிக்கும் நடுவில் சுவராக நிற்க, தோல்வி தள்ளிப் போடப்பட்டதே தவிர, தவிர்க்கப்பட முடியவில்லை. 33 பந்துகளில், அரைசதம் கடந்தார் வியாட். இது அவரது 8 அரைசதம். அதன்பிறகு இந்தக் கூட்டணி, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தது.

17-வது ஓவரில், ஸிவரின் விக்கெட் விழுந்தாலும், அது எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டவில்லை. 56 பந்துகளில், 89 ரன்களைச் சேர்த்த வியாட்டின் இன்னிங்ஸால், எட்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே, வெற்றிக் கோட்டைத் தொட்டது இங்கிலாந்து. எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போன போட்டியில், தொடரை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளக் காட்டிய முனைப்பில், பாதியைக் கூடத் தொடரை வெல்ல வேண்டிய, இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனைகளிடம் பார்க்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களையும் இழந்த இந்தியா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில், டெஸ்ட் போட்டியை மட்டும் சமன் செய்ததோடு, மற்ற இரண்டு தொடர்களையுமே இழந்துள்ளது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *