Share on Social Media


சென்னை:தமிழகத்தில், ‘ஸ்மார்ட்’ மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசின், ‘எனர்ஜி எபிஷியன்சி’ நிறுவனம், மின் துறை அமைச்சர் மற்றும் மின் வாரிய தலைவரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளது.

தமிழக மின் வாரியம், வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தியுள்ளது.அதிக கட்டணம்மின் ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர். குறித்த காலத்தில் கணக்கெடுக்காததால், மின் பயன்பாடு அதிகரித்து, நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வருகிறது.மேலும், அதிக மின் பயன்பாடு உள்ள வீடுகளில், குறைத்து கணக்கெடுப்பது உள்ளிட்ட முறைகேடுகளும் நடக்கின்றன.

இதை தவிர்க்க, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், ‘ஸ்மார்ட்’ மீட்டர் திட்டத்தை செயல்படுத்துமாறு, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஸ்மார்ட் மீட்டரில் மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய தேதி, மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன் அலுவலக, ‘சர்வரில்’ இணைக்கப்படும். பின், மின் கட்டண விபரம், நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ்., தகவலாக தெரிவிக்கப்படும்.

தமிழக மின் வாரியம், நீண்ட தாமதத்திற்கு பின், தற்போது தான், தனியார் நிறுவனம் வாயிலாக சென்னை தி.நகரில், 1.41 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தி வருகிறது.அனுமதி தரவில்லைஅத்திட்டத்தை செயல்படுத்த, எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், பலமுறை மின் வாரிய அதிகாரி களை சந்தித்து பேசியும், அந்நிறுவனத்திற்கு அனுமதி தரவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முன்பணம் பெறாமல் செயல்படுத்துவது தொடர்பாக, எனர்ஜி எபிஷியன்சி நிறுவனஅதிகாரிகள், விரைவில் தமிழக மின் துறை அமைச்சர் மற்றும் மின் வாரிய தலைவரை சந்தித்து பேச உள்ளனர்.திட்டத்திற்கான செலவு தொகையை, தவணை முறையில் செலுத்தலாம். ஸ்மார்ட் மீட்டரில், மாதந்தோறும் அல்லது எப்போது வேண்டுமானாலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க முடியும்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *