Share on Social Media


திருப்பூர்:தொழில் வேகத்திற்கேற்ப, ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் சுறுசுறுப்பாக இல்லாததால், இவை, திருப்பூரின் ‘வேகத்தை’ குறைப்பதாக இருக்கின்றன.பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கேற்ப, திருப்பூரில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகவில்லை. குறிப்பாக, சாலைகளின் நிலைமை படுமோசமாக உள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஆனால், மக்களுக்கு வசதியை தருவதற்குப் பதிலாக இப்பணி நகரில் பெரும்பாலான பகுதிகளில் கூடுதல் அவதியை ஏற்படுத்தி வருகிறது.’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அமைக்கப்படும் ‘ஸ்மார்ட்’ ரோடு பணிகள் இது வரை முழுமையாக எங்குமே செய்து முடிக்கப்படாமல் உள்ளது.பெரும்பாலான பகுதிகள் தோண்டியெடுக்கப்பட்டு பணிகள் பாதியில் நிற்கின்றன. வடிகால் அமைக்கும் பணி, நடைபாதை பணி பல இடங்களில் ரோடு மட்டத்துக்கும் சற்றும் தொடர்பின்றி தனியாக நிற்கிறது. கேபிள் கொண்டு செல்லும் டக்ட் அமைப்பு சில இடங்களில் பூர்த்தியாகாமல் உள்ளது.

‘அம்ரூத்’ திட்டத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை மற்றும் 4வது குடிநீர் திட்டத்துக்கான குழிகள் பதிக்க தோண்டிய குழிகள் பெரும்பாலான நகர ரோடுகளில் பலி வாங்கும் குழிகளாகவே மாறி விட்டன. இதுபோன்ற நிலை நகரின் பிரதான பகுதிகளில் நாள்தோறும் மக்கள் நடமாட்டத்தையும், வாகன போக்குவரத்தையும் பதம் பார்க்கும் நிலையிலேயே உள்ளன.முதல்வர் வருகையை முன்னிட்டு ஒரே நாளில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்த சில ரோடுகளை அதிகாரிகள் மும்முரமாக அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு சரி செய்துள்ளனர்.

இந்த வேகத்தை எப்போதும் காட்டியிருந்தால், திருப்பூரின் ரோடுகள் தற்ேபாது சிறப்பாக இருந்திருக்கும்.அம்ரூத்’ திட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு பணிக்கு நடைபெறும் கட்டுமானம் நீர் நிலை என்ற புகார் உள்ளது. தற்போது மழை நீர் தேங்கியதால் கட்டுமானம் பாதிக்கப்பட்டு பணி நிறுத்தப்பட்டுள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பல பணிகள் இது போல் குளறுபடிகள் ஏற்பட்டு மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும் மறு ஆய்வு செய்து, அவற்றை துரிதப்படுத்தி முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்று திருப்பூர் வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் இதற்கான நடவடிக்கையை அதிரடி யாக மேற்கொள்ள வேண்டும்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *