Share on Social Media


தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் வீட்டு உபயோகப் பொருள்கள், டி.வி மற்றும் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது. கடந்த மாதம் W-சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையை விட்டே வெளியேறப் போவதாக தகவல்களை வெளியாகி வருகின்றன. நிறுவனத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவல்களும் அளிக்கப்படவில்லை.

எல்.ஜி நிறுவனத்தின் மொபைல் பிரிவை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத நிலையில், மொபைல் பிரிவை விற்பதை விட அதனை மூட நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது இருக்கும் கடும் போட்டி காரணமாக எல்.ஜி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அந்த நிறுவனத்தின் மொபைல் உற்பத்தி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்தடுத்து வெளியாகவிருந்த புதிய மாடல்களின் வெளியீடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இதனால் பணியாளர்களின் வேலைக்கு எந்தப் பாதிப்பும் வராது எனத் தெரிவித்திருக்கும் எல்.ஜி நிறுவனம், மொபைல் பிரிவில் பணியாற்றியவர்களைத் தங்களின் மற்ற பிரிவிற்கு மாற்றி வருகிறது. விரைவில் இது குறித்த தகவல்களை அந்நிறுவனம் தெரிவிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *