Share on Social Media


அதில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், போராட்டக்குழுவினர், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் என 719 பேர், ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனர். காவல்துறையினர், அப்போதைய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் வசித்த ஊழியர்கள், ஆலை நிர்வாகத்தினர் என பலரையும் விசாரணை செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு நபர் ஆணைய விசாரணை முகாம் அலுவலகம்

ஒரு நபர் ஆணைய விசாரணை முகாம் அலுவலகம்

இந்த மாதம் வரும் 17-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரை, துப்பாக்கிச்சூட்டின் போது பணியில் இருந்த காவலர்கள், கலவரத்தில் காயம்பட்ட காவலர்கள் என 45 பேரை விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. முந்தைய விசாரணையின் போதே“எஞ்சியுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியிருந்தார். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *