Share on Social Media


”எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்”

என தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பதிவிட்ட ட்வீட், தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக, கேரள மாநில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில், அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஷ்னுநாத் பேசிய வீடியோ கேரளா பார்டரைத் தாண்டி தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் வைரலானது.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

அதில் ” 2 கோடி குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.4000, 14 வகை மளிகைப்பொருட்கள், மருத்துவர்களுக்கு 30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 மற்ற மருத்துவப் பணியாளருக்கு 15,000 ஊக்கத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம்” என வரிசையாக அடுக்கி இவையெல்லாவற்றையும் கொடுத்தது கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அல்ல தமிழ்நாடு முதல்வர் எம்.கே.ஸ்டாலின்” என அவர் பேசிய விதம் ஹைலட் ஆனது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *