Share on Social Media


‘ராஜா ராணி’யில் தொடங்கிய அட்லியின் கோலிவுட் பயணம், இப்போது ஷாருக்கானோடு பாலிவுட்டில் தடதடக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ப்ரீ – ப்ரொடக்‌ஷனில் இருந்த ஷாருக்கான் – அட்லி படம் இப்போது ஷூட்டிங்கிற்குத் தயாராகிவிட்டது.

ஷங்கரின் உதவியாளரான அட்லி ‘ராஜாராணி’யைத் தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் கமர்ஷியலாக வெற்றிபெற, ஷாருக்கானே அட்லியைத் தேடி வந்தார்.

நயன்தாரா

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஹிட் இல்லாமல் தவிக்கும் ஷாருக்கான் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தப்படத்திலும் நடிக்காமல் பிரேக்கில் இருந்தார். இப்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கயிருக்கிறார் ஷாருக்கான். சித்தார்த் ஆனந்த் இயக்கும் முதல் படத்தின் ஷூட்டிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்தப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்து அட்லி மற்றும் ராஜ்குமார் ஹிரானி படங்களில் நடிக்க இருக்கிறார் ஷாருக்.

இதில் அட்லி படம் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. தீபிகா படுகோனே இந்தப்படத்துக்கும் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், இறுதியாக நயன்தாரா ஹீரோயின் கதாபாத்திரத்தைப் பிடித்திருக்கிறார்.

‘பிகில்’ படத்தில் அட்லியோடு பணியாற்றிய கேமராமேன் விஷ்ணு, எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ் என அதே டெக்னிக்கல் டீம் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *