Share on Social Media


தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் முன்னணி எழுத்தாளர்களை திரைக்கதை – வசனம் எழுதவைப்பது இயக்குநர் ஷங்கரின் வழக்கம். எழுத்தாளர் சுஜாதா மறையும் வரை அவருடன் பயணித்த ஷங்கர் அதன்பிறகு வைரமுத்து மகன் மதன்கார்க்கியோடு இணைந்து பணியாற்றினார். கடைசியாக அவர் இயக்கிவரும் ‘இந்தியன்- 2’ படத்துக்கு ஜெயமோகன், லட்சுமி சரவணக்குமார், கபிலன் வைரமுத்து என மூன்று பேர் திரைக்கதை, வசனம் எழுதிவருகிறார்கள். இந்நிலையில் தமிழின் முன்னணி எழுத்தாளரும், ஆனந்த விகடனில் ‘வேள்பாரி’ தொடரை எழுதியவரும், மதுரை எம்.பி-யுமான சு.வெங்கடேசனுடன் கைகோர்த்திருக்கிறார் ஷங்கர்.

ராஜமெளலி, ரன்வீர்சிங், ஷங்கர், சு.வெங்கடேசன்

ராஜமெளலி, ரன்வீர்சிங், ஷங்கர், சு.வெங்கடேசன்

சிரஞ்சீவி மகன் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, தெலுங்கு – தமிழ் இருமொழிப்படத்தை இயக்குகிறார் ஷங்கர். ‘இந்தியன் – 2’ படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு இப்படத்தை தயாரிக்க, நடிகைகள் கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழின் முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு தெலுங்கில் ஶ்ரீ மாதவ் புரா என்பவர் திரைக்கதை – வசனம் எழுத, தமிழுக்கு சு.வெங்கடேசன் திரைக்கதை – வசனம் எழுதுகிறார். இப்படத்துக்கு கதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என செய்திகள் வெளியாகிப் பின்னர், கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குநர் அது ”தன்னுடைய கதை” என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்த சம்பவமும் நடந்தது.

கதை தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஷங்கர் என்றாலே இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பது மாறி ‘இந்தியன் -2’ படத்துக்கு அனிருத் இசையமைத்த நிலையில், ராம் சரண் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ‘பாய்ஸ்’ படத்தில் தமனை நடிகராக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *