Share on Social Media


ஏற்கெனவே பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் உள்ளது. அத்துடன் வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் தொடங்கப்பட்ட தென்னை வணிக வளாகத்திற்காக கட்டப்பட்ட கட்டடங்களும் பயன்படுத்தி கொள்ளக்கூடிய வகையில் உடனடியாக தொடங்குவதற்கு ஏதுவாக உள்ளது. எனவே வேளாண்மைத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு கஜா புயலினால் சோர்ந்து கிடந்த எங்களை புத்துணர்ச்சியாக்கும் விதமாக உள்ளது” என்றார்.

பேராவூரணியை சேர்ந்த தென்னை விவசாயியான காந்தி என்பவர், “கஜா புயல் நேரத்தில் பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது குறித்து கோரிக்கை வைத்தோம். அதே போல் தமிழக அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தால் கேரளாவை சேர்ந்த தென்னை விவசாயிகள்தான் பயன் அடைந்தனர். தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா விவசாயிகள் எந்தப் பயனையும், வளர்ச்சியையும் அடையவில்லை.

தற்போது பட்டுக்கோட்டையில் இந்த மையம் அமைய இருப்பதால், தென்னை வளர்ச்சி வாரியத்தில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது, எவை பயன் தரும் என விவசாயிகளுக்கு எளிதாகத் தெரிய வரும். அவற்றை பயன்படுத்தி தென்னை மரங்கள் போலவே, தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளும் வாழ்க்கையில் உயர்வார்கள். இந்த நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கோம்” என தெரிவித்தார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *