Share on Social Media


புதுடில்லி: ‛‛புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு பா.ஜ., தொண்டர்கள் ஏற்படுத்தாமல் இருந்ததால் தான் அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது. விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்தன. இனிப்பு வழங்கி கொண்டாடினர். இருப்பினும் பார்லிமென்டில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று வேளாண் சங்கங்கள் அறிவித்து போராடி வருகின்றனர்.

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியதாவது: என்னைப் போன்றவர்களுக்கு வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவதாக பிரதமரின் அறிவிப்பு வலியை ஏற்படுத்தியிருக்கிறது. வேளாண் சட்டங்கள் குறித்த முக்கியத்துவத்தை விவசாயிகளின் மத்தியில் ஏற்படுத்த முடியாததற்கு பா.ஜ., தொண்டர்களே காரணம். நம்மால் ஏன் வேளாண் சட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்ல முடியவில்லை?. இவ்வாறு உமாபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *