Share on Social Media


புதுடில்லி: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இரண்டு கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட பிரதிகளை ஜனாதிபதியிடம் நாளை(டிச.,24) வழங்க இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை ரத்து செய்யக்கோரி ராகுல் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்க உள்ளனர். இதுகுறித்து காங். பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய பிரசாரத்தை செப். மாதம் துவங்கினோம்.

கடந்த மூன்று மாதங்கள் நடந்த பிரசாரத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் பண்ணை தொழிலாளர்கள் என இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுஉள்ளோம்.ராகுல் தலைமையில் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து விவசாயிகள் கையெழுத்திட்ட பிரதிகளை வழங்க உள்ளோம்.

கடுமையான புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் ஆதரவு இருப்பது போல் போலி கணக்கெடுப்புகளை அரசு வெளியிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *