Share on Social Media


பெண்ணாடம் : ‘தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதே அரசின் நோக்கம்’ என தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பேசினார்.

திட்டக்குடியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியன சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஜெகதீசன் முன்னிலை வகித் தனர். திருச்சி மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன் வரவேற்றார்.

நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், கூடுதல் கலெக்டர்கள் ரஞ்சித்சிங், பவன்குமார் கிரியப்பனவர் , மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் எகசானலி உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அமைச்சர் கணேசன் பேசுகையில், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவது அ

ரசின் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் முகாம்கள் நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. இதனை படித்த இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
வேலைவாய்ப்பு முகாமில் 141 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தன. 5,538 பேர் இளைஞர்கள் பங்கேற்றனர். 570 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும், 938 பேர் வெளிநாட்டு வேலைகளுக்கு 2ம் கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 101 பேர் திறன் பயிற்சிக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *