WhatsApp Image 2020 10 14 at 10 57 28 PM Tamil News Spot
Share on Social Media

தொடர்ந்து, ராணிப்பேட்டை பாரதி நகரிலுள்ள பன்னீர்செல்வத்தின் சொந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையைத் தொடர்ந்தனர். இன்று அதிகாலை வரை நீடித்த சோதனையில், லஞ்ச ஒழிப்புத்துறையினரே அதிரும் அளவுக்கு கோடிக்கணக்கிலான ரூபாய் கட்டுக்கட்டாக சிக்கியது. மொத்தம் 3,25,20,000 ரூபாய் ரொக்கப் பணமும், மூன்றரை கிலோ தங்க நகைகளும், ஆறரை கிலோ வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

தவிர, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துப் பத்திரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்தச் சொத்துகள் முறைகேடாக வாங்கப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்தும் தணிக்கை செய்யப்பட்டுவருகிறது.

இது பற்றி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டபோது, “மலைக்கவைக்கும் அளவுக்கு பன்னீர்செல்வத்திடமிருந்து பணம், நகைகளைக் கைப்பற்றியிருக்கிறோம். அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருள்களையும் முறைப்படி வேலூர் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கவிருக்கிறோம்’’ என்றனர்.

ஒரே அதிகாரியிடம் இவ்வளவு பணமும் நகைகளும் சிக்கியிருக்கும் சம்பவம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *