Share on Social Media


இதேபோல், அணைக்கட்டுத் தொகுதியில் புறநகர மாவட்டச் செயலாளர் வேலழகனைப் பரிந்துரைச் செய்துள்ளாராம் வீரமணி. ஆனால், அந்த தொகுதியைக் கூட்டணியிலிருக்கும் பா.ம.க விட்டுத் தர மறுத்துவிட்டது. இருந்தாலும், வீரமணி தொடர்ந்து பிடிவாதமாக அணைக்கட்டுத் தொகுதியைக் கேட்டு வருகிறாராம். கே.வி.குப்பம் தனித் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதனுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், தனது டெண்டர் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் வேலூர் மாநகர மாவட்டச் துணைச் செயலாளர் ஜெயப்பிரகாசத்தின் சொந்தங்களை களம் இறக்க திட்டமாம்.

2019-ல் இடைத்தேர்தலைச் சந்தித்த குடியாத்தம் தனித் தொகுதியில், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமியைப் பரிந்துரைச் செய்திருந்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும் என்கிறார்கள். ஆனால், தனக்கு விசுவாசமாக இருந்த ஒரே காரணத்தினால், கஸ்பா மூர்த்தியை வேட்பாளராக நிறுத்தினார் வீரமணி. அதன் விளைவு குடியாத்தம் தொகுதியைத் தி.மு.க தட்டிச்சென்றது.

துரைமுருகனுடன் வீரமணி

துரைமுருகனுடன் வீரமணி

இதேபோல், ஆம்பூர் இடைத்தேர்தலிலும் தனக்கு விசுவாசமாக இருந்த ஜோதிராமலிங்க ராஜாவை வேட்பாளராகக் களமிறக்கியிருந்தார் வீரமணி. அங்கேயும் தி.மு.க வென்றது. இதே தவறை வீரமணி மீண்டும் செய்யப் பார்க்கிறார் என்கிறார்கள். இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த ஜோதிராமலிங்க ராஜாவை மீண்டும் ஆம்பூரில் களமிறக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பக்கத்துத் தொகுதியான வாணியம்பாடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் உடையது. அதிகார மோதலால், நிலோஃபர் கபிலை வாணியம்பாடிக்குள்ளேயே அடக்கி வைத்துள்ளார் வீரமணி. நிலோஃபர் மீண்டும் சீட் கேட்பதை தட்டிக்கழிக்கும் வீரமணி, தன்னுடைய விசுவாசியான ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கோவி.சம்பத்குமாரைப் பரிந்துரைச் செய்துள்ளாராம்.

திருப்பத்தூரிலும் தன் புகழ்பாடும் நகரச் செயலாளர் டி.டி.குமாருக்கு சீட் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளாராம் வீரமணி. 2016 தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியை டி.டி.குமாரை மீண்டும் நிறுத்தினால் சறுக்கல் ஏற்படும் என்கிறார்கள் அங்கிருக்கும் நிர்வாகிகள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *