Share on Social Media



வேலூர்: கொரோனாவை தொடர்ந்து, ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இது, கண்களை முதலில் பாதிக்கும். பின்னர், மூளையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படும். வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு நேற்று முன்தினம் வரை 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, வேலூர்  சேண்பாக்கத்தை சேர்ந்த 44 வயதுள்ள நபர் ஒருவர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணமடைந்ததாக  டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். மீண்டும்  உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதே தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில்  கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருந்ததால் அவரது இடது கண் அகற்றப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். சத்துவாச்சாரியை சேர்ந்த பேராசிரியர், திருப்பத்தூரை சேர்ந்த ஒருவரும் கருப்பு பூஞ்சை நோயால் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து  மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணனிடம் கேட்டபோது, ‘‘அவர்கள் கொரோனா  வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்’’ என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *