AdobeStock 245393308 e1563465119214 Tamil News Spot
Share on Social Media

கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரியினால் இயங்கும் வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில், லேப்டாப், ஸ்மார்ட் போன் போன்ற தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், வரும் 2024-ஆம் ஆண்டில் அதிநவீன பேட்டரி தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் மின்சார காரை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிம் குக்

டிம் குக்
Stephen Lam

‘புராஜெக்ட் டைட்டன்’ என்பது கடந்த 2014-ம் ஆண்டில் ஆப்பிள் துவக்கிய மின்சார கார் தயாரிப்பு திட்டமாகும். இந்த மின்சார கார் தயாரிக்கும் திட்டமானது, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பதாக தற்போது ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாய்ஸ் கம்யூனிகேஷன் வழியாக காரை ஸ்டார்ட் செய்ய சொன்னதும், ஸ்டார்ட் ஆகக்கூடிய வகையில் ஆப்பிள் மின்சார கார் ‘செல்ஃப் டிரைவிங்’ ஆப்ஷனை கொண்டிருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக், “இந்த கார் திட்டத்தைச் செயற்கை நுண்ணறிவின் தாய் திட்டம் என்றும், ஆப்பிளின் கார் வெளிவரும்போது அது முதன்முதலில் ஆப்பிள் போனைப் பார்த்தது போன்ற அனுபவத்தைத் தரும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *