Share on Social Media


லண்டன்: ஃபைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட்டின் தடுப்பூசிக்கும் பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனாவை தொடர்ந்து உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 2வது தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து வரும் சூழலில் தற்போது 2வது தடுப்பூசிக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா ஜெனகா என்ற இரு அமைப்புகள் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு பிரிட்டனில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதன் மூலம் உலகம் முழுவதும் குறைந்த விலையில் தடுப்பூசியை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஃபைசர், மாடனா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஒப்புதல் வழங்கியிருக்கின்றன. இந்தியாவில் இதுவரை எந்த தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஓரிரு நாட்களில் கோவிஷீல்ட்டு எனப்படும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தினுடைய இணை தயாரிப்பு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளது. 2 டிகிரி செல்சியஸ் முதல்  8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை சேமித்து வைக்க முடியும்.

ஆக்ஸ்போர்டு  தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.300 முதல் ரூ. 500 வரை இருக்கக்கூடும். ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருப்பதால் இந்தியாவில் ஓரிரு ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்புக்கு இதுவரை ஃபைசர், மாடனா,  ஆக்ஸ்போர்டு ஆகிய 3 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. உலகளவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *