Share on Social Media


சென்னை—சென்னை மாநகராட்சியின், 175 முதல் 182 வரை உள்ள வார்டுகளை உள்ளடக்கியது, வேளச்சேரி சட்டசபை தொகுதி. சென்னையில், தொகுதி மறுசீரமைப்புக்கு பின், 2011ம் ஆண்டு உதயமானது இந்த தொகுதி. முதல் தேர்தலில், அ.தி.மு.க.,வும்; 2016 தேர்தலில், தி.மு.க.,வும் வெற்றி பெற்றது.அடையாறு, பெசன்ட்நகர், சாஸ்திரி நகர், திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி என சென்னையின் முக்கிய பகுதிகள், இந்த தொகுதி எல்லையில் உள்ளன.கஸ்துாரிபாநகர், இந்திராநகர், திருவான்மியூர், பெருங்குடி, தரமணி, வேளச்சேரி ஆகிய மேம்பால ரயில் நிலையங்கள் மற்றும் பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரைகள், இந்த தொகுதியில் உள்ளன.இந்த தொகுதியில், நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பும், அதற்கு எவ்வித தீர்வும் எட்டப்படாததும் தான் பிரதான பிரச்னையாக உள்ளது. பக்கிங்ஹாம், வீராங்கால் மற்றும் வேளச்சேரி ஏரி உபரி நீர் கால்வாய் இருந்தும், மழை நீர் முைறயாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைவதில்லை. எப்போதெல்லாம் சென்னையில், வெள்ள பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக வேள்சேரி உள்ளது. எந்தக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்று, தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தேர்வானாலும், வேளச்சேரியை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.இம்முறை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, அனைத்து வேட்பாளர்களும், வெள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஏரிப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, கால்வாயில் அடைப்பு ஏற்படாமல் முறையாக பராமரித்தாலே, இந்த பிரச்னைக்கு எளிதாக தீர்வு கிடைக்கும் என்கின்றனர், இத்தொகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள். அதேபோல், வேளச்சேரி ஏரி, 250 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அரசு திட்டம், சாலை அமைப்பு பணிகள், தனியார் ஆக்கிரமிப்புகள் போக, தற்போது, 55 ஏக்கராக சுருங்கியுள்ளது. அதிலும், 1,800க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன.இந்த ஏரியை பாதுகாக்க, 30 ஆண்டுகளாக, வேளச்சேரி மக்கள் கோரிக்கை வைத்தும், இரு கட்சி ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்களே பாதுகாப்பாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.வேளச்சேரி ஏரியில், படகு குழாம் அமைக்கப்படும்; ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றி நடைபாதை அமைத்து பாதுகாக்கப்படும்; ஏரி நீரை எடுத்து சுத்திகரித்து, குடிநீராக வினியோகம் செய்யப்படும் என, பல ஆண்டுகளாக ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கூறி வருகின்றனர். பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த ஏரியை, மாநராட்சி பராமரித்து வருகிறது. புதிதாக தேர்வாகும் மக்கள் பிரதிநிதியாவது, வேளச்சேரியில் ஏற்படும் வெள்ள பிரச்னைக்கும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என, இத்தொகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வேளச்சேரி ஏரியை துார்வாரி, முறையாக பராமரித்தால், 5 கி.மீ., சுற்றளவில், நிலத்தடி நீர் பிரச்னை இருக்காது. இது தெரிந்தும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து ஏரியை பாதுகாத்து, அதை புனரமைக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கை, வெள்ள பாதிப்பை தடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, புதிய, எம்.எல்.ஏ., சட்டசபையில் குரல் எழுப்ப வேண்டும். நலச்சங்க நிர்வாகிகள், வேளச்சேரிவேட்பாளர்கள் கூறியவாக்குறுதிகள் வேளச்சேரி ஏரியை பாதுகாப்பது ராம்நகர், விஜயநகர், ஏ.ஜி.எஸ்., காலனி வெள்ள பாதிப்பை தடுப்பது இரண்டடுக்கு மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்துவது ஆட்சேபனை இல்லாத இடங்களுக்கு பட்டா வழங்குவது குளங்களை சீரமைக்க முன்னுரிமை அளிப்பது தேவையான இடங்களுக்கு, ‘மினி பஸ்’ இயக்குவது தொகுதியில் அரசு கலைக்கல்லுாரி அமைப்பது

AdvertisementThanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *