Share on Social Media

பின்லாந்தில், 15வது ஒலிம்பிக் போட்டி (1952, ஜூலை 19 – ஆக. 3) நடந்தது. 69 நாடுகளை சேர்ந்த 4955 வீரர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்கா 40 தங்கம் உட்பட 56 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்தது. போட்டியை நடத்திய பின்லாந்து 6 தங்கம் உட்பட 18 பதக்கங்களுடன் 12வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் நடந்த இந்த ஒலிம்பிக்கில் முதன்முறையாக குதிரையேற்ற போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் டென்மார்க்கின் 26 வயது குதிரையேற்ற வீராங்கனை லிஸ் ஹார்டல் அசத்தினார். இவரது இரண்டு முழங்கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டதால், குதிரையில் ஏறுவதற்கே உதவி தேவைப்பட்டது. இருப்பினும் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஒலிம்பிக் ஹாக்கியில் வெல்ல முடியாத அணியாக வலம் வந்த இந்திய அணி 1952ல் பைனலுக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்துக்கு எதிரான பைனலில் வெற்றிக் கொடி நாட்டிய இந்தியா, தொடர்ந்து 5வது முறையாக (1928, 32, 36, 48, 52) தங்கம் வென்று ஹாக்கியில் தனது ஆதிக்கத்தை பதிவு செய்தது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *