Share on Social Media

முதல் நவீன ஒலிம்பிக் போட்டி 1896ல் (ஏப். 6–15) கிரீசில் உள்ள ஏதென்ஸ் நகரில் நடந்தது. அமெரிக்கா, ஜெர்மனி உட்பட 14 நாடுகளை சேர்ந்த 241 பேர் பங்கேற்றனர். அமெரிக்க வீரர் ஜேம்ஸ் கானோல்லி, ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் முதல் தங்கம் வென்றார்.  வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி கிடையாது. 

நீசசல் போட்டி நடந்த விதம் சுவாரஸ்யமானது. இதில் ஹங்கேரி வீரர் ஆல்பிரட் ஹாஜோஸ் அசத்தினார். இவரது தந்தை ஆற்றில் மூழ்கி இறந்ததால், நீச்சலின் அருமை குறித்து உணர்ந்திருந்தார். அப்போது நீச்சல் போட்டி நடத்த குளம் இல்லை. படகில் அழைத்துச் சென்று கடலில் ஒரு குறிப்பிட்ட துாரத்தில் இறக்கி விட்டுவிடுவர். அங்கிருந்து நீச்சல் அடித்து கரைக்கு திரும்பி வர வேண்டும். 1200 மீ., நீச்சலில் கரைக்கு திரும்பிய ஒரே வீரர் ஆல்பிரட் தான். அவர் கூறுகையில்,‘‘எனது உடல் நடுங்கியது, குளிரில் வெடவெடத்தது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் கரை சேர்ந்தேன்,’’ என்றார்.

மாரத்தான் பெருமை

மாரத்தான் ஓட்டத்தில். கிரீசின் ஸ்பைரி டான் லுாயி  முதலில் வந்தார். இவருக்கும் அடுத்த வந்தவருக்கும் இடையே 7 நிமிட இடைவெளி இருந்தது. இதைக் கண்ட அங்கிருந்த ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

20

முதல் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா 11 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்கள் வென்று முதலிடம் பெற்றது. போட்டியை நடத்திய கிரீஸ் (10 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம்) 46 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பெற்றது.

 

122

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 43 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 122 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *