Share on Social Media


என்ன விவகாரம் என விசாரித்தோம். பெயரை வெளியிட விரும்பாமல் பலரும் நம்மிடம் பேசினார்கள். அதன் தொகுப்பு இங்கே!

” ‘இம்சை அரசன்’ பஞ்சாயத்து, சினிமா உலகத்துல எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆரம்பத்துலயே சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எதுவும் எட்டலை. இந்த சூழல்லதான் சில வாரங்களுக்கு முன்னாடி ஐசரி கணேஷ் தலையிட்டு இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்னு பேசினார்.

அந்தப் பேச்சுவார்த்தை முதல்ல சுமூகமா முடியற மாதிரிதான் போச்சு. ஆனா, இடையில் என்ன நடந்ததுன்னு தெரியல வடிவேலு கடுப்பாகிட்டார். ஐசரி கணேஷ் ஷங்கருக்கு ஆதரவா செயல்படுறாரோங்கிற சந்தேகம் அவருக்கு வந்துடுச்சு. அதனால மேற்கொண்டு பேச்சுவார்த்தையில அவர் ஆர்வம் காட்டலை. வடிவேலுவின் இந்த நடவடிக்கைகள் ஷங்கர் தரப்புக்கு மேலும் ஆத்திரத்தைத் தர, அவரும் சில வார்த்தைகளை விட்டதா சொல்றாங்க.

அதாவது, ‘எனக்குன்னு ஒரு ராசி இருக்கு. நான் எந்தக் காலமும், எந்த கோர்ட் படியையும் மிதிக்க மாட்டேன். இதுக்கு முன்னாடி கூட சில பிரச்னைகளை சந்திச்சிருக்கேன். அதனால இந்தப் பிரச்னை போற போக்குல போகட்டும். அவரும் எங்க வேணாலும் போகட்டும்’ என ஐசரியிடமே ஷங்கர் சொன்னதாகச் சொல்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *