Share on Social Media


புது டில்லி: கடந்த அக்டோபர் 9 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு அரசு முறை பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்றார். அதற்கு சீனா இன்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதற்கு இந்தியா உடனுக்குடன் “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி” என பதிலடி தந்துள்ளது.

சீனா – இந்தியா இடையே கடந்த 17 மாதங்களாக கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்னை நீடிக்கிறது. ஞாயிறன்று இரு தரப்பு ராணுவ மட்டத்தில் 13-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. படைகளை விலக்கிக் கொள்வது, பழைய நிலையே எல்லையில் தொடரச் செய்வது குறித்து பேசப்பட்டது.

ஆனால் இந்தியாவின் கோரிக்கையை சீனா ஏற்காததால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே நீண்ட ஆண்டுகளாக அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இந்திய தலைவர்கள் அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் செய்யும்.

இந்நிலையில் கடந்த வார இறுதியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. எல்லைப் பிரச்னைகளை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது. சீனாவின் இந்த எதிர்ப்பை நிராகரிப்பதாக இந்தியா பதிலடி தந்துள்ளது.

இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: சீனாவின் இது போன்ற கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. இந்தியத் தலைவர்கள் வழக்கமாக வேறு இந்திய மாநிலங்களுக்கு செல்வது போல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் பயணம் செய்கிறார்கள்.

latest tamil news

இந்திய தலைவர்கள் இந்த மாநிலத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பது அர்த்தமற்றது. லடாக் எல்லையில் நிலவும் தற்போதைய சூழலுக்கு காரணம், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா தன்னிச்சையாக நிலையை மாற்றியமைத்தது தான். என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *