Share on Social Media


உத்திரமேரூர்-செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், சின்னாபின்னமாக உடைந்த வெங்கச்சேரி – மாகரல் தரைப்பாலம் சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.

15 நாட்களில் பாலம் வரும் என்பதால், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.உத்திரமேரூர் – காஞ்சிபுரம் சாலை, வெங்கச்சேரி – மாகரல் இடையே, செய்யாறு குறுக்கிடும் இடத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்தையும், காஞ்சிபுரம் ஒன்றியத்தையும் இணைக்கும் பாலம், 1954ல் கட்டப்பட்டது.கடந்த, 67 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இப்பாலம், 2015ல், செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது.ரூ.24 கோடிஇதனால் உத்திரமேரூர் – காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது.சேதமடைந்த பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.கடந்த 2016ல், புதிய பாலம் கட்ட அப்போதைய அ.தி.மு.க., அரசு, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், பாலம் அமைக்கும் பணியை கிடப்பில் போட்டது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வெங்கச்சேரியில் புதிய பாலம் அமைக்க தமிழக அரசு, 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.ஆற்றில் நிலத்தடி மண் மாதிரி சேகரிக்கப்பட்டு, மண் அடுக்குகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.புதிய பாலத்திற்கு அணுகுசாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணி நிறைவு பெறும் வகையில், போக்குவரத்திற்காக தற்காலிக சாலை அமைப்பதற்கான அளவீடு பணியும் நடந்து வந்தது.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால்திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக, அக்டோபர் மாதத்தில் இருந்தே செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நவம்பர் இரண்டாவது வாரத்தில், வெள்ளம் அதிகரித்து, வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்ததால், வெங்கச்சேரி பாலம் மூழ்கியது. 2 அடி உயரத்திற்கு மேல், வெள்ள நீர் ஆர்ப்பரித்து சென்றதால், பாலம் சின்னாபின்னமாக சிதைந்து உடைந்தது.தீவிரம்நவ., 19 முதல், வெங்கச்சேரி பாலம் வழியாக உத்திரமேரூர் – காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து தடைபட்டது.இதனால், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, 28 கி.மீட்டர் செல்ல வேண்டிய நிலையில், மானாம்பதி வழியாக, 42 கி.மீ., சுற்றி பயணித்தனர்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர், உத்திரமேரூர் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின், தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கடந்த, 11ல்வெங்கச்சேரி பாலத்தைஆய்வு செய்தனர்.பாலத்தை உடனே சீரமைக்கும்படி, நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தினர்.இதையடுத்து, பாலம் சேதமடைந்த பகுதியில், ராட்சத குழாய்கள் அமைத்து, பாலம் சீரமைப்பு தீவிரமாக நடந்து வருகிறது.ராட்சத குழாய்களை பாலத்தில் அடுக்கி 15 நாட்களில் தரைப்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என, உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவளூரில் தரைப்பாலம் சீரமைப்புவாலாஜாபாத் – அவளூர் கிராமத்தில் பாயும் பாலாற்றில் 1.5 கி.மீ., நீள தரைப்பாலம் உள்ளது. அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியான் குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம் உட்பட பல கிராம மக்களின் போக்குவரத்துக்கு, பாலமே பிரதானம்.நவம்பர் மாதம், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தரைப்பாலம் சேதமடைந்தது. கிரேன் இயந்திரம் வைத்து, ராட்சத சிமென்ட் குழாய்களை, வாகன போக்குவரத்திற்கு ஏற்ப நீளவாக்கில் வரிசையாக, நெடுஞ்சாலைத் துறையினர் அடுக்கி வருகின்றனர். சீரமைப்பு பணி விரைவில் முடிந்து, பொதுமக்களின் வாகன பயன்பாட்டிற்கு பாலம் கொண்டு வரப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *